Connect with us

Uncategorized

பாலியல் புகார் எதிரொலி… ஊட்டியில் மிதுன் சக்கரவர்த்தி மகன் திருமணம் நிறுத்தம்

Published

on

ஊட்டி: நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று நடக்கவிருந்த இந்தி நடிகர் மிதுன்சக்கரவர்த்தி மகனின் திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மகன் மஹா அக்‌ஷய் மீது டெல்லி காவல்துறையில் பெண் ஒருவர் அளித்த புகாரில் திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் பட உலகில் அனைவராலும் அறியப்படும் மிதுன் சக்கரவர்த்தி 1980-களில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் ஒருவர். இவர் சினிமா துறை மட்டுமில்லாமல் நட்சத்திர ஹோட்டல்களையும் நடத்தி வருகிறார்.

மஹா அக்‌ஷய் மீது மும்பையை சேர்ந்த போஜ்பூரி நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் :- திருமணம் செய்வதாக கூறி மஹா அக்‌ஷய் என்னை கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தார். இதனால் நான் கர்ப்பம் ஆனேன். இதை தொடர்ந்து மாத்திரைகள் கொடுத்து கருவை கலைக்க வற்புறுத்தினார். இதை அறிந்த மஹா அக்‌ஷயின் தாயாரும், முன்னாள் நடிகையுமான யோசிதா பாபி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை டெல்லி தலைமை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் ஏக்தா கவுபா விசாரித்தார்.இதுதொடர்பாக நடிகர் மஹா அக்‌ஷய், அவரது தாயார் யோசிதா பாலி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

தமிழகத்தில் ஊட்டி, மசினகுடி பொக்காபுரம் பகுதியில் இவருக்கு நட்சத்திர ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி உள்ளது. இந்நிலையில், இவரது மகன் மஹா அக்‌ஷய் திருமணத்தை ஊட்டியில் உள்ள தனக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலில் நடத்த திட்டமிட்டிருந்தார் மிதுன் சக்கரவர்த்தி, நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இச்செய்தி ஊடகங்களுக்கும், உள்ளூர்வாசிகளுக்கும் தெரியாமல் நடத்த திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மிதுன் சக்கரவர்த்தியின் மகன் மஹா அக்‌ஷய் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், தான் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானதாகவும் ஏற்கெனவே நடிகை ஒருவர் புகார் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக, டெல்லி நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது.

அந்த புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் ஊட்டிக்கு விரைந்துள்ளனர். அவர்கள், மிதுன் சக்கரவர்த்தி மற்றும் அவரது மகனிடம் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் மடால்ஷா என்பவருடன் மஹா அக்‌ஷய் நடக்கவிருந்த திருமணம் திடீரென நிறுத்தப்பட்டது. மேலும், மணப்பெண்ணின் குடும்பம் அங்கிருந்து கிளம்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு சம்பந்தப்பட்டவர்களை தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The scheduled marriage of veteran actor Mithun Chakraborty’s son was cancelled on Saturday.

Uncategorized

ஸ்ரீரெட்டி பாலியல் புகாரில் சிக்கிய தமிழ் பட நடிகர் – பரபரப்பு

Published

on

By

சென்னை: ஸ்ரீரெட்டியின் லீக்ஸ் பட்டியலில் நடிகர் ஆதியும் இணைந்துள்ளார். ஆதி நல்ல மனிதர், தஸபெல்லா ஹோட்டலில் எங்களுக்குள் நடந்த விஷயம் ஒரு முறை தான் என்றாலும் அதுவும் தவறுதான், ஆதலால் அதை மறைக்க முடியாது என்று கூறியுள்ளார்.

தற்சமயம் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியை தெரியாதவர்களே இருக்க முடியாது என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டவர்கள் என ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் ஒரு பட்டியலை வெளியிட்டு வருகிறார்.

திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டுவருபவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு திரையுலகின் பலரின் பெயர்களை வெளியிட்ட ஸ்ரீரெட்டி, தற்போது தமிழ் லீக்ஸ் என்ற பெயரில், தமிழ் நடிகர்கள், இயக்குனர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார். நடிகர் விஷால் தன்னை மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

ஆனாலும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட போவதாக கூறிய ஸ்ரீரெட்டி இன்று இயக்குனர் சுந்தர் சி. மீதும் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். ஸ்ரீரெட்டியின் தமிழ் லீக் லிஸ்ட்டில் தற்போது இளம் நடிகர் பெயரும் இடம்பெற்றுள்ளது.

கடந்த சில நாட்களாக ஸ்ரீரெட்டி தமிழ் லீக் லிஸ்ட்டில் கோலிவுட்டில் உள்ள ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றன. இவர்கள் அனைவரும் தன்னிடம் பாலியல் உறவு வைத்தார்கள் என்று கூறி அவர்களுடைய பெயர்களை வெளியிட்டுள்ளார். நேற்று இயக்குனர் சுந்தர் சி மீதும் பாலியல் புகாரை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் தற்போது ஸ்ரீரெட்டி தமிழ் லீக் லிஸ்ட்டில் இளம் நடிகர் சந்தீப் கிஷான் பெயரும் இடம்பெற்றுள்ளது. மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு படங்களிலும் நடித்த சந்தீப் கிஷான் ஒரு மோசமான நபர் அவருடன் என்னை அனுபவித்தார் என்று ஸ்ரீரெட்டி கூறி, சொல்ல முடியாத கெட்டவார்த்தைகளில் திட்டியுள்ளார்.

இந்நிலையில் சென்னை வந்துள்ள ஸ்ரீரெட்டி அளித்துள்ள ஒரு பேட்டியில் நடிகர் ஆதியும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார் என தெரிவித்த அவர் மேலும், ஆதி நல்ல மனிதர், தஸபெல்லா ஹோட்டலில் எங்களுக்குள் நடந்த விஷயம் ஒரு முறை தான் என்றாலும் அதுவும் தவறுதான், ஆதலால் அதை மறைக்க முடியாது என கூறியுள்ளார்.

Shri reddy released the names In tamil leakes, who were sexually abused her. Today she the new name Sandeep kishan and Actor Adhi.

Continue Reading

Uncategorized

ஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா

Published

on

By

சென்னை: சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடிகர் பாபி சிம்ஹா குடிபோதையில் நண்பருடன் சேர்ந்து தகராறு செய்ததாக புகார் எழுந்துள்ளது.

பிரபல நடிகர் பாபி சிம்ஹா தமிழ் சினிமாவில் வில்லனாக மற்றும் ஹீரோவாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ஜிகா்தண்டா, சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் பாபி சிம்ஹா. தேசிய விருதும் பெற்றுள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன், கார்த்தி சுப்பராஜ் இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

அவா் ஞாயிற்றுக் கிழமை சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றுள்ளாா். இந்நிலையில் நேற்று தனது நண்பர் கருணா என்பவருடன் சென்னை கிண்டி ஈக்காட்டு தாங்கலில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு நண்பருடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. போதை அதிகமாகி பாரில் இருந்த மற்றவர்களை கண்டபடி பேசியுள்ளார்.

இதனை தொடர்ந்து பாபிசிம்ஹாவிற்கும் அவரது நண்பருக்கும் இடையே கொடுக்கல், வாங்கல் தொடர்பான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.

இதனையடுத்து விடுதி பாதுகாப்பு ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போதையில் தகராறில் ஈடுபட்ட பாபி சிம்ஹா மற்றும் கருணாவை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Boby simha a famous actor, he acted in many films as a hero and villian and got a big place. Now, he is acting in many films. He recently went to a star hotel. He created many problems with his friend after drinking. It become a problem and police is ongoing with the investigation.

Continue Reading

Uncategorized

கடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி

Published

on

By

சென்னை: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளதால் படக்குழுவனர் மிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியான படம் கடைக்குட்டி சிங்கம். பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் எடுக்கப்பட்டுள்ள இப்படம், விவசாயத்தையும், குடும்ப உறவுகளின் பெருமைகளையும் பேசும் விதமாக அமைந்துள்ளது.

சத்யராஜ், சாயிஷா சைகல், பிரியா பவானி சங்கர், அர்த்னா பினு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் கடைக்குட்டி சிங்கம். இந்த படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுக்களும் குவிந்தவண்ணம் உள்ளன

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. முதல் முறையாக கார்த்தி, சூர்யா கூட்டணியில் வந்த இப்படத்திற்கு கார்த்தி சூர்யாவே இயக்குனர்களாக இருந்துள்ளார்கள் என்று ஒரு பக்கம் கூறுகிறார்கள்.

இந்த நிலையில், இப்படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியில் அப்படக்குழுவினர் உள்ளனர். குடும்ப கதையையும், விவசாயத்தையும் மையப்படுத்தியே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள இப்படம் வசூலில் மட்டும் கொஞ்சம் பின் தங்கியுள்ளது. சென்னை பாக்ஸ் ஆபிஸில் கடைக்குட்டி சிங்கம் ரூ.1.49 கோடி வசூல் படைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக துணை ஜனாதிபதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான “சின்னபாபு” (தமிழில் “கடைக்குட்டி சிங்கம்”) திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம்.’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

துணை ஜனாதிபதியின் பாராட்டினால் படக்குழுவினர் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர். வெங்கையா நாயுடுவின் பாராட்டிற்கு படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

Vice president Vengaiah naidu appreciated Kadaikutti singam film, on his twitter page. The team members were very happy because of this news. And it also got a massive collection on box office.

Continue Reading

Trending

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress.