Connect with us

Uncategorized

கடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி

Published

on

சென்னை: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளதால் படக்குழுவனர் மிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியான படம் கடைக்குட்டி சிங்கம். பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் எடுக்கப்பட்டுள்ள இப்படம், விவசாயத்தையும், குடும்ப உறவுகளின் பெருமைகளையும் பேசும் விதமாக அமைந்துள்ளது.

சத்யராஜ், சாயிஷா சைகல், பிரியா பவானி சங்கர், அர்த்னா பினு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் கடைக்குட்டி சிங்கம். இந்த படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுக்களும் குவிந்தவண்ணம் உள்ளன

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. முதல் முறையாக கார்த்தி, சூர்யா கூட்டணியில் வந்த இப்படத்திற்கு கார்த்தி சூர்யாவே இயக்குனர்களாக இருந்துள்ளார்கள் என்று ஒரு பக்கம் கூறுகிறார்கள்.

இந்த நிலையில், இப்படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியில் அப்படக்குழுவினர் உள்ளனர். குடும்ப கதையையும், விவசாயத்தையும் மையப்படுத்தியே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள இப்படம் வசூலில் மட்டும் கொஞ்சம் பின் தங்கியுள்ளது. சென்னை பாக்ஸ் ஆபிஸில் கடைக்குட்டி சிங்கம் ரூ.1.49 கோடி வசூல் படைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக துணை ஜனாதிபதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான “சின்னபாபு” (தமிழில் “கடைக்குட்டி சிங்கம்”) திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம்.’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

துணை ஜனாதிபதியின் பாராட்டினால் படக்குழுவினர் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர். வெங்கையா நாயுடுவின் பாராட்டிற்கு படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

Vice president Vengaiah naidu appreciated Kadaikutti singam film, on his twitter page. The team members were very happy because of this news. And it also got a massive collection on box office.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Uncategorized

ஸ்ரீரெட்டி பாலியல் புகாரில் சிக்கிய தமிழ் பட நடிகர் – பரபரப்பு

Published

on

By

சென்னை: ஸ்ரீரெட்டியின் லீக்ஸ் பட்டியலில் நடிகர் ஆதியும் இணைந்துள்ளார். ஆதி நல்ல மனிதர், தஸபெல்லா ஹோட்டலில் எங்களுக்குள் நடந்த விஷயம் ஒரு முறை தான் என்றாலும் அதுவும் தவறுதான், ஆதலால் அதை மறைக்க முடியாது என்று கூறியுள்ளார்.

தற்சமயம் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியை தெரியாதவர்களே இருக்க முடியாது என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டவர்கள் என ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் ஒரு பட்டியலை வெளியிட்டு வருகிறார்.

திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டுவருபவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு திரையுலகின் பலரின் பெயர்களை வெளியிட்ட ஸ்ரீரெட்டி, தற்போது தமிழ் லீக்ஸ் என்ற பெயரில், தமிழ் நடிகர்கள், இயக்குனர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார். நடிகர் விஷால் தன்னை மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

ஆனாலும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட போவதாக கூறிய ஸ்ரீரெட்டி இன்று இயக்குனர் சுந்தர் சி. மீதும் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். ஸ்ரீரெட்டியின் தமிழ் லீக் லிஸ்ட்டில் தற்போது இளம் நடிகர் பெயரும் இடம்பெற்றுள்ளது.

கடந்த சில நாட்களாக ஸ்ரீரெட்டி தமிழ் லீக் லிஸ்ட்டில் கோலிவுட்டில் உள்ள ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றன. இவர்கள் அனைவரும் தன்னிடம் பாலியல் உறவு வைத்தார்கள் என்று கூறி அவர்களுடைய பெயர்களை வெளியிட்டுள்ளார். நேற்று இயக்குனர் சுந்தர் சி மீதும் பாலியல் புகாரை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் தற்போது ஸ்ரீரெட்டி தமிழ் லீக் லிஸ்ட்டில் இளம் நடிகர் சந்தீப் கிஷான் பெயரும் இடம்பெற்றுள்ளது. மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு படங்களிலும் நடித்த சந்தீப் கிஷான் ஒரு மோசமான நபர் அவருடன் என்னை அனுபவித்தார் என்று ஸ்ரீரெட்டி கூறி, சொல்ல முடியாத கெட்டவார்த்தைகளில் திட்டியுள்ளார்.

இந்நிலையில் சென்னை வந்துள்ள ஸ்ரீரெட்டி அளித்துள்ள ஒரு பேட்டியில் நடிகர் ஆதியும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார் என தெரிவித்த அவர் மேலும், ஆதி நல்ல மனிதர், தஸபெல்லா ஹோட்டலில் எங்களுக்குள் நடந்த விஷயம் ஒரு முறை தான் என்றாலும் அதுவும் தவறுதான், ஆதலால் அதை மறைக்க முடியாது என கூறியுள்ளார்.

Shri reddy released the names In tamil leakes, who were sexually abused her. Today she the new name Sandeep kishan and Actor Adhi.

Continue Reading

Uncategorized

ஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா

Published

on

By

சென்னை: சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடிகர் பாபி சிம்ஹா குடிபோதையில் நண்பருடன் சேர்ந்து தகராறு செய்ததாக புகார் எழுந்துள்ளது.

பிரபல நடிகர் பாபி சிம்ஹா தமிழ் சினிமாவில் வில்லனாக மற்றும் ஹீரோவாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ஜிகா்தண்டா, சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் பாபி சிம்ஹா. தேசிய விருதும் பெற்றுள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன், கார்த்தி சுப்பராஜ் இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

அவா் ஞாயிற்றுக் கிழமை சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றுள்ளாா். இந்நிலையில் நேற்று தனது நண்பர் கருணா என்பவருடன் சென்னை கிண்டி ஈக்காட்டு தாங்கலில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு நண்பருடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. போதை அதிகமாகி பாரில் இருந்த மற்றவர்களை கண்டபடி பேசியுள்ளார்.

இதனை தொடர்ந்து பாபிசிம்ஹாவிற்கும் அவரது நண்பருக்கும் இடையே கொடுக்கல், வாங்கல் தொடர்பான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.

இதனையடுத்து விடுதி பாதுகாப்பு ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போதையில் தகராறில் ஈடுபட்ட பாபி சிம்ஹா மற்றும் கருணாவை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Boby simha a famous actor, he acted in many films as a hero and villian and got a big place. Now, he is acting in many films. He recently went to a star hotel. He created many problems with his friend after drinking. It become a problem and police is ongoing with the investigation.

Continue Reading

Uncategorized

சிவகார்த்திக்கேயனுக்கு பின்னணி பாடும் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்

Published

on

By

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சீமராஜா படத்தில், சூப்பர் சிங்கர் 6 பட்டம் வென்ற செந்தில் கணேஷ் பின்னணிப் பாடகராகஅறிமுகமாகிறார்.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘சீம ராஜா’. சிவ கார்த்திக்கேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ள இந்தப் படத்தில், சிம்ரன் வில்லியாகவும், நெப்போலியன் தந்தையாகவும், சூரி,மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, லால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும், கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் 6 பட்டம் வென்ற செந்தில் கணேஷ் சீமராஜா பின்னணிப் பாடகராக அறிமுகமாகிறார். விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் 6 சீசன் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. பெரும்பாலும் திரையிசை பாடல் பாடக்கூடியவர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தனர்.

இந்த சீசனில் முதன்முறையாக நாட்டுப்புற கலைஞர்களுக்கு இடம் அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலெட்சுமி போட்டியாளர்களாக இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.

இவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது முதலே பலத்த வரவேற்பு இருந்து வந்தது. குறிப்பாக இவர்கள் பாடிய பாடல்கள் மக்கள் இசையை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றன. நெசவாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரின் வாழ்க்கையை எடுத்து பாடலாக பாடியது அனைவரையும் கவர்ந்தது.

விஜய் டிவியில் கடந்த 15ம் தேதி ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில், மாளவிகா, அனிருத், ஸ்ரீகாந்த், ரக்‌ஷிதா, ஷக்தி மற்றும் செந்தில் கணேஷ் ஆகியோர் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர். இவர்களில் மக்கள் இசைக் கலைஞரும், நாட்டுப்புற பாடகருமான செந்தில் கணேஷ் சூப்பர் சிங்கர் 6 பட்டத்தை தட்டிச் சென்றார்.

எல்லா சூப்பர் சிங்கர் சீசனிலும், வெற்றிபெறும் போட்டியாளர் ஒரு பிரபல இசையமைப்பாளரின் இசையில் பாடுவதற்கான வாய்ப்பை விஜய் டிவி ஏற்படுத்தி கொடுக்கிறது. அந்த வகையில் சீசன் 6ல் வெற்றிபெறுபவர் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடுவார் என உறுதியளிக்கப்பட்டது.

இதனையடுத்து வெற்றிபெற்ற செந்தில்கணேஷ் ஏ.ஆர்.ரகுமானுடன் எந்த படத்தில் பாடப் போகிறார் என்று எதிர்பார்ப்புடன் இருக்கும்போது, இசையமைப்பாளர் டி.இமானிடம் இருந்து அதிரடி அறிவிப்பு வந்துள்ளது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவக்கார்த்திகேயன் சமந்தா நடிக்கும் சீமராஜா திரைப்படத்தில் அட்டகாசமான ஒரு கிராமிய பாடலை செந்தில்கணேஷை பாட வைக்க போகிறார் என்பதை மகிழ்ச்சி பொங்க டி.இமான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நாட்டுப்புற பாடல் என்றால் இமான் இசையில் புகுந்து விளையாடுவார். அதுவும் சிவா என்று வரும்போது அது தனி ரகமாக இருக்கும். சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாடலை விஜய் டிவி நிகழ்சியில் அவரின் முன்பே பாடி கலக்கினார் செந்தில். இப்போது சிவகார்த்திகேயனுக்கே பாடும் வாய்ப்பு வந்திருக்கிறது. ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு பாட்டு நிச்சயமாகிவிட்டது. இப்போது டி.இமான் அடுத்த வாய்ப்பையும் வழங்கிவிட்டார்.

Siva karthikeyan finished acting in a new film named as Seemaraja. In that film Samantha is acting as a heroine. Ponram is directing this film. In that film Super singer -6 title winner Senthil ganesh get a chance to sing a song. Senthil ganesh got a name as Isaikalignar.

Continue Reading

Trending

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress.