Connect with us

Uncategorized

தமிழ்படம் 2 ஜூலை 12ல் ரிலீஸ் – சமூக வலைத்தளங்களில் தீயான டிரெய்லர்

Published

on

தமிழ்ப்படம்-2’வின் இரண்டு நிமிடக் காட்சியுடன் படம் வெளியீடு குறித்த அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியான ‘தமிழ்ப்படம்’ தமிழ் சினிமாவை மட்டும் கலாய்த்து உருவாகியிருந்தது. ஆனால், ‘தமிழ்ப்படம்-2’ போஸ்டரில் இருந்து காட்சிகள் வரை சினிமா மட்டுமல்லாமல் உள்ளூர் அரசியல் முதல் தேசிய அரசியல் வரை கலாய்த்து உருவாகியுள்ளது.
சின்ன கவுண்டர், காலா, சர்கார் எனத் தினம் ஒரு படத்தை கலாய்த்து போஸ்டர்கள் வெளியாகிவருவதால் அடுத்து எந்தப் படத்தில் கைவைத்துள்ளனர் என ரசிகர்கள் மட்டுமல்லாமல் கோலிவுட் வட்டாரமே கூர்ந்து கவனித்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் இரண்டு நிமிடக் காட்சியை வெளியிட்டு அரசியல் பிரச்சினைகளை காமெடியாக்கி உள்ளனர்.
ஜிஎஸ்டி, மோடி கொடுப்பதாக சொன்ன 15 லட்சம் ரூபாய், ஜல்லிக்கட்டு, அணைகள் பிரச்சினை என இரண்டு நிமிடத்தில் பல விஷயங்களைச் சமூக வலைதளங்களில் வலம்வரும் மீம் கிரியேட்டர் போல் கலாய்த்துச் செல்கிறார் இயக்குநர். ‘ஏன் லேட்?’ என ஐஸ்வர்யா மேனன் கேட்க, ‘கலவரத்தை அடக்கிவிட்டு ஓப்பனிங் சாங் முடிச்சுட்டு வருவதற்கு லேட்டாகி விட்டது’ என வழக்கம் போல சிவா பஞ்ச் வைக்கிறார்.
இந்த படத்திற்காக போஸ்டர்ஸ், புரோமோ வீடியோக்களை கணக்கேயில்லாமல் வெளியிட்டு வருகிறது படக்குழு. அந்த வகையில் ஜூலை 9ஆம் தேதி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தது. ஜிஎஸ்டி, ஆப்பிள் ஐபோன், பிரதமர் மோடி, தேவர் மகன் கமல், ஜல்லிக்கட்டு, எனப் பலரையும் கலாய்த்து வெளியிட்டிருந்த அந்த வீடியோவை #GoBackSanthanaBarathi எனும் ஹேஷ்டேக்குடன் வெளியிட்டிருந்ததால், அது பாஜக கட்சியைச் சேர்ந்த அமித் ஷாவின் சென்னை வருகையைக் கிண்டல் செய்யும் விதமாகவும் இருந்தது.
இந்த நிலையில் சத்தமே இல்லாது ஒரு சம்பவத்தை செய்திருக்கிறது படக்குழு. அதாவது படத்தின் இரண்டு நிமிடக் காட்சி எனக் கூறி வெளியிடப்பட்ட அந்த ஸ்நீக் பீக் வீடியோ தற்போது ‘டெலீடட் சீன்ஸ்’ எனும் பெயரில் யூடியூப்பில் உள்ளது. இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள இயக்குநர் ,“சில டெக்னிக்கல் பிரச்சினைகளால் இந்தக் காட்சிகளை நீக்கியிருக்கிறோம். இந்தத் தகவலை அனைவருக்கும் பரப்புங்கள்” எனக் கூறியுள்ளார். தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ளது.
Director CS Amudhan was active on Twitter yesterday and he was taking questions from fans. When a fan asked about Tamizh Padam 2’s release date, the quirky-natured director replied with – 12.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Uncategorized

ஸ்ரீரெட்டி பாலியல் புகாரில் சிக்கிய தமிழ் பட நடிகர் – பரபரப்பு

Published

on

By

சென்னை: ஸ்ரீரெட்டியின் லீக்ஸ் பட்டியலில் நடிகர் ஆதியும் இணைந்துள்ளார். ஆதி நல்ல மனிதர், தஸபெல்லா ஹோட்டலில் எங்களுக்குள் நடந்த விஷயம் ஒரு முறை தான் என்றாலும் அதுவும் தவறுதான், ஆதலால் அதை மறைக்க முடியாது என்று கூறியுள்ளார்.

தற்சமயம் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியை தெரியாதவர்களே இருக்க முடியாது என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டவர்கள் என ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் ஒரு பட்டியலை வெளியிட்டு வருகிறார்.

திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டுவருபவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு திரையுலகின் பலரின் பெயர்களை வெளியிட்ட ஸ்ரீரெட்டி, தற்போது தமிழ் லீக்ஸ் என்ற பெயரில், தமிழ் நடிகர்கள், இயக்குனர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார். நடிகர் விஷால் தன்னை மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

ஆனாலும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட போவதாக கூறிய ஸ்ரீரெட்டி இன்று இயக்குனர் சுந்தர் சி. மீதும் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். ஸ்ரீரெட்டியின் தமிழ் லீக் லிஸ்ட்டில் தற்போது இளம் நடிகர் பெயரும் இடம்பெற்றுள்ளது.

கடந்த சில நாட்களாக ஸ்ரீரெட்டி தமிழ் லீக் லிஸ்ட்டில் கோலிவுட்டில் உள்ள ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றன. இவர்கள் அனைவரும் தன்னிடம் பாலியல் உறவு வைத்தார்கள் என்று கூறி அவர்களுடைய பெயர்களை வெளியிட்டுள்ளார். நேற்று இயக்குனர் சுந்தர் சி மீதும் பாலியல் புகாரை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் தற்போது ஸ்ரீரெட்டி தமிழ் லீக் லிஸ்ட்டில் இளம் நடிகர் சந்தீப் கிஷான் பெயரும் இடம்பெற்றுள்ளது. மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு படங்களிலும் நடித்த சந்தீப் கிஷான் ஒரு மோசமான நபர் அவருடன் என்னை அனுபவித்தார் என்று ஸ்ரீரெட்டி கூறி, சொல்ல முடியாத கெட்டவார்த்தைகளில் திட்டியுள்ளார்.

இந்நிலையில் சென்னை வந்துள்ள ஸ்ரீரெட்டி அளித்துள்ள ஒரு பேட்டியில் நடிகர் ஆதியும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார் என தெரிவித்த அவர் மேலும், ஆதி நல்ல மனிதர், தஸபெல்லா ஹோட்டலில் எங்களுக்குள் நடந்த விஷயம் ஒரு முறை தான் என்றாலும் அதுவும் தவறுதான், ஆதலால் அதை மறைக்க முடியாது என கூறியுள்ளார்.

Shri reddy released the names In tamil leakes, who were sexually abused her. Today she the new name Sandeep kishan and Actor Adhi.

Continue Reading

Uncategorized

ஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா

Published

on

By

சென்னை: சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடிகர் பாபி சிம்ஹா குடிபோதையில் நண்பருடன் சேர்ந்து தகராறு செய்ததாக புகார் எழுந்துள்ளது.

பிரபல நடிகர் பாபி சிம்ஹா தமிழ் சினிமாவில் வில்லனாக மற்றும் ஹீரோவாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ஜிகா்தண்டா, சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் பாபி சிம்ஹா. தேசிய விருதும் பெற்றுள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன், கார்த்தி சுப்பராஜ் இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

அவா் ஞாயிற்றுக் கிழமை சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றுள்ளாா். இந்நிலையில் நேற்று தனது நண்பர் கருணா என்பவருடன் சென்னை கிண்டி ஈக்காட்டு தாங்கலில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு நண்பருடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. போதை அதிகமாகி பாரில் இருந்த மற்றவர்களை கண்டபடி பேசியுள்ளார்.

இதனை தொடர்ந்து பாபிசிம்ஹாவிற்கும் அவரது நண்பருக்கும் இடையே கொடுக்கல், வாங்கல் தொடர்பான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.

இதனையடுத்து விடுதி பாதுகாப்பு ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போதையில் தகராறில் ஈடுபட்ட பாபி சிம்ஹா மற்றும் கருணாவை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Boby simha a famous actor, he acted in many films as a hero and villian and got a big place. Now, he is acting in many films. He recently went to a star hotel. He created many problems with his friend after drinking. It become a problem and police is ongoing with the investigation.

Continue Reading

Uncategorized

கடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி

Published

on

By

சென்னை: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளதால் படக்குழுவனர் மிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியான படம் கடைக்குட்டி சிங்கம். பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் எடுக்கப்பட்டுள்ள இப்படம், விவசாயத்தையும், குடும்ப உறவுகளின் பெருமைகளையும் பேசும் விதமாக அமைந்துள்ளது.

சத்யராஜ், சாயிஷா சைகல், பிரியா பவானி சங்கர், அர்த்னா பினு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் கடைக்குட்டி சிங்கம். இந்த படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுக்களும் குவிந்தவண்ணம் உள்ளன

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. முதல் முறையாக கார்த்தி, சூர்யா கூட்டணியில் வந்த இப்படத்திற்கு கார்த்தி சூர்யாவே இயக்குனர்களாக இருந்துள்ளார்கள் என்று ஒரு பக்கம் கூறுகிறார்கள்.

இந்த நிலையில், இப்படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியில் அப்படக்குழுவினர் உள்ளனர். குடும்ப கதையையும், விவசாயத்தையும் மையப்படுத்தியே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள இப்படம் வசூலில் மட்டும் கொஞ்சம் பின் தங்கியுள்ளது. சென்னை பாக்ஸ் ஆபிஸில் கடைக்குட்டி சிங்கம் ரூ.1.49 கோடி வசூல் படைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக துணை ஜனாதிபதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான “சின்னபாபு” (தமிழில் “கடைக்குட்டி சிங்கம்”) திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம்.’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

துணை ஜனாதிபதியின் பாராட்டினால் படக்குழுவினர் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர். வெங்கையா நாயுடுவின் பாராட்டிற்கு படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

Vice president Vengaiah naidu appreciated Kadaikutti singam film, on his twitter page. The team members were very happy because of this news. And it also got a massive collection on box office.

Continue Reading

Trending

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress.